ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (22:05 IST)

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலருக்கு அரிவாள் வெட்டு: சென்னையில் பரபரப்பு

சென்னை பூந்தமல்லி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் ஒருவரை மூன்று மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி பகுதியில் இன்று அதிகாலை காவலர் அன்பழகன் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாகனத்தில் வந்தவர்கள், தாங்களும் போலீசார் தான் என்று கூறினர். இதில் அன்பழகன் சந்தேகம் அடைந்த நிலையில் திடீரென அந்த வாகனத்தில் இருந்த மூன்று பேர் காவலரை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர்.

அரிவாள் காயம் ஏற்பட்ட நிலையிலும் அன்பழகனும், அவருடன் இருந்த மற்ற காவலர்களும் சேர்ந்த மூன்று பேர்களையும் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணணயில் மூன்று பேர்களும் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் பெயர்கள் ரஞ்சித், பன்னீர்செல்வம், விஜயகுமார் என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ள 3 பேர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இன்று பிற்பகல் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரகள் என்றும் கூறப்படுகிறது.