முதல்வரின் கனவு திட்டம் இது- திமுக பிரமுகர் டுவீட்
பெண்கள் இலவச பேருந்து பயணம் பற்றி, ஓசியில் தானே பேருந்தில் செல்கிறீர்கள் என்று மேடையில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இது மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது. இதுபற்றி திமுக பிரமுகர் ஒரு டூவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் கைப்பற்றியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நடந்து வருகிறது.
தேர்தல் அறிக்கையின்படி, மக்களுக்கு திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, ஓசியில் தானே பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள் என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.
இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட எதிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அரசு பேருந்துகள் எங்களின் வரிப்பணத்தில் தான் வாங்கப்பட்டது என்றும் எங்களால்தான் பேருந்துகளை வாங்கப்பட்டது என்றும் உங்கள் பணத்தில் வாங்கவில்லை என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல ஊடகங்கள் இதுகுறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது.
இதுகுறித்து திமுக பிரமுகர் ராஜிவ் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில்,இச் செயல் ஊடக அறமா @JuniorVikatan ?
எல்லா அரசியல்வாதிகளின் பேச்சுகளையும் இப்படி போட்டு காட்டி பேட்டி எடுப்பீர்களா?
பெண்களின் உரிமைக்காக தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் வந்தது. முதல்வரின் கனவு திட்டம் இது!
அமைச்சர் @KPonmudiMLA அவர்களின் நோக்கம் பிழை இல்லை தவறாக பரப்ப வேண்டாம்! என்று பதிவிட்டுள்ளார்.