செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:35 IST)

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கின் சீரழிவிற்கு இதுவே சாட்சி .- எடப்பாடி

தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர்  முரளீதரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் , தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசபட்டது கடும் கண்டனத்துக்குரியது,

விடியா அரசின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கின் சீரழிவிற்கு இதுவே சாட்சி எனத் தெரிவித்துள்ளார்.