இப்ப சொல்லமாட்டேன்!. 4 மணிக்கே மேல் சொல்றேன்... இழுத்தடிக்கும் திருமாவளவன்..

சனி, 9 மே 2026 (13:28 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சியமைக்க மேலும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. எனவே காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.

அதை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு கொடுத்து விட்டார்கள் எனவே தவெகவின் பலம் 116ஆக உயர்ந்திருக்கிறது. ஆட்சியமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் இதுவரை தனது முடிவை சொல்லாமல் இருக்கிறார்..

கடந்த வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். நாளை காலை நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு இதுபற்றி பதில் சொல்வொம் என்றார்.. அதன்பின் இன்று மாலைதான் நிர்வாகிகளிடம் பேசப்போகிறோம் என நேற்று காலை சொன்னார். அதோடு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவுகளையும் தெரிந்து கொண்டு நாங்கள் முடிவை சொல்வோம் என கூறியிருந்தார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு  தரவு தெரிவித்துவிட்ட பின்னரும் திருமாவளவன் அமைதியாகவே இருக்கிறார்..

இன்று காலை திருமாவளவன் தனது முடிவை சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே தவெந்க தொண்டர்களும், செய்தியாளர்களும் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகம் முன்பு குவிந்தார்கள். இப்போது ‘இப்போது எங்கள் முடிவை சொல்லப்போவதில்லை.. எங்கள் தலைவர் திருமாவளவன் இன்று மாலை 4 மணிக்கு மேல் தனது முடிவை அறிவிப்பார்’ என  விசிக நிர்வாகிகள் கூறினர்.எதற்காக திருமாவளவன் இப்படி இழுத்திருக்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது..

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments