Daily Horoscope
✕

ஆர்.ராசாவை ஸ்டானின் கண்டிக்க வேண்டும்!.. திருமாவளவன் பேட்டி...

Updated: திங்கள், 14 செப்டம்பர் 2026 (14:33 IST)
சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிடி நிர்மல்குமார் ஆகியோர் மிசா காலத்தில் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி பேசியது திமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுக சார்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த விழாவில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி ஆ.ராசா முதல்வர் விஜய் பற்றியும் சிடி நிர்மல்குமர் பற்றியும் மிகவும் அவதூறாக பேசினார்.

ஒருவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என சொல்கிறார்.. நீ யாருக்கு பிறந்தாய் என நான் சந்தேகப்படுகிறேன் என பேசினார்.  அதேபோல் அதே மேடையில் பேசிய சேகர் பாபு ‘ஓடுகாலி நாயே ..ஓடுகாலி நாயே.. உன்னை விரட்டி அடிப்போம்’ என முதல்வர் விஜயை விமர்சித்தார்.

ஆ.ராசாவின் பேச்சை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டித்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ‘திமுக ஆர்ப்பாட்டத்தில் மிகவும் அநாகரீகமாக பேசியிருக்கிறார்கள்.. ஈன்ற தாயை பழிக்கும் இழிச்சொற்களால்  அரசியல் எதிரிகளை விமர்சிப்பது கவலை அளிக்கிறது..

இது தவெகவுக்கு எதிராக போகும் என்பதை விட திமுகவுக்கு எதிராக மக்களிடத்தில் கருத்து பதிவாகும் என்பதை திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் இப்படி பேசக்கூடியவர்களை வெளிப்படையாக பொதுமக்கள் அறியக்கூடிய வகையில் கண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்’ என தெரிவித்திருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments