Daily Horoscope
✕

உச்சநீதிமன்ற தீர்ப்பை விட மோசமானது.. திமுகவை விமர்சித்த திருமாவளவன்...

Updated: சனி, 28 நவம்பர் 2026 (12:02 IST)
தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. கடந்த வருடம் இதற்கான மசோதாவை பாஜக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவுக்கு தொடக்கம் முதலே திமுக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது திடீரென பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் வழங்குவதாக இருந்தால் இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளரிடம் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன் ‘திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடவும் திமுக எடுத்துள்ள இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இது நாட்டுக்கே பேராபத்தாக முடியும். ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என திட்டமிடும் சங்பரிவார்களின் திட்டத்திற்கு துணை போவது போல திமுக முடிவு அமைந்துள்ளது’ என அவர் கூறியிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி!.. சவரனுக்கு ரூ.400 குறைந்தது!

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா?.. திமுகவுக்கு தவெக பகிரங்க சவால்!

மலை அடிவாரத்தில் CRPF வீரர்கள் குவிப்பு!.. திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் சிறையில் அடைப்பு...

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

அடுத்த கட்டுரையில்
Show comments