1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (11:32 IST)

சார்ஜ் போட்ட போனை மறந்த திருடன்..! – திருட போன இடத்தில் சுவாரஸ்யம்!

நாமக்கலில் ஓட்டல் ஒன்றில் திருட சென்ற ஆசாமி அங்கு தனது போனை சார்ஜ் போட்டுவிட்டு மறந்துவிட்ட சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் சித்திரவேல். வழக்கம்போல ஓட்டல் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் சித்திரவேல்.

பின்னர் அந்த உணவகத்திற்குள் புகுந்த திருடன் அங்கு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளான். சித்திரவேலின் ஓட்டலில் இருந்து ஆசாமி ஒருவன் எகிறி குதித்து செல்வதை கண்ட சிலர் சித்திரவேலுக்கு போன் செய்து சொல்லியுள்ளனர்.


சித்திரவேல் போலீஸுக்கு தகவல் சொல்லியுள்ளார். ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது உள்ளே வந்த திருடன் முதலில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளான். அது கடினமாக இருந்ததால் கல்லாவில் இருந்து பணத்தை எடுக்க தொடங்கியுள்ளான். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் அங்கேயே சார்ஜூம் போட்டுள்ளான்.

கல்லாவிலிருந்து நிறைய பணம் கிடைக்கவும் அதை பார்த்த குஷியில் சார்ஜ் போட்ட தனது போனை மறந்துவிட்டு கம்பி நீட்டியுள்ளான் திருடன். அந்த போனை பறிமுதல் செய்த போலீஸார் அதை வைத்து திருடனை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Edited By: Prasanth.K