செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (21:58 IST)

அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வைத்து மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறார்கள்- கொ.இ.பேரவை கார்வேந்தன்

போலீஸ் தோரணையோடு அண்ணாமலை அரசியல் செய்வது ? பழிவாங்கும் செயல் என்றும் அமித்ஷா, மோடி கூட என்ன செய்கின்றார்கள் என்பது கூட தெரியாது ஆனால் அண்ணாமலை தான் எல்லாம் செய்வதாக கூறி பாஜக அண்ணாமலை ஒரு கட்டமைப்பினை அவிழ்த்து விடுகின்றார் என்றும் கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் கார்வேந்தன் அதிரடி பேட்டியளித்தார்.
 
அதில், பாஜக அண்ணாமலையால் தாமரை அழுகத்தான் போகின்றது என்றும், அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் பழிவாங்கும் செயலுக்கும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.
 
கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் கார்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜியை, அமலாக்கத்துறையினர் மிகவும் சித்திரவதை செய்துள்ளதோடு, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வைக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. ஆகவே, அமைச்சர் என்றும் பாராமல், அந்த அளவிற்கு டார்ச்சர் செய்த அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளதாக கூறிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வைத்து மாநில அரசின் உரிமைகளை பறித்து வருகின்றார்கள். ஆனால், தமிழகத்தில் இந்த சதி வேலையாகாது, ஏற்கனவே வேளாளர் பிரச்சினையை நாங்கள் கொண்டு சென்றதற்கு, இதே மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழ் சமுதாய மக்களில் இரு சமுதாயத்தினை மட்டும் சாதி பிரச்சினை ஏற்பட சதி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் அவரது உழைப்பு மற்றும் அரசியலையும் பொறுக்க முடியாதவர்களுக்கு, கோவையிலும் இவர் சென்று அரசியல் செய்வதால் பொறுக்க முடியாத பாஜக அண்ணாமலையின் சதி வேலை தான் என்றும் கூறினார். மேலும், அக்யூஸ்ட் கூட பழகி, பழகி, தான் ஒரு போலீஸ் காரனாக இருந்த அண்ணாமலை, அரசியலுக்கு வந்தும் அனைத்து அரசியல் கட்சியினரையும் மிரட்டும் தோரணையில் ஈடுபட்டு வருகின்றார். இன்று இது நடக்கும், நாளை இது நடக்கும் என்றும் கூறி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா கூட தெரியாததை., இவருக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று அமைப்பினை மக்களிடம் பிரதிபலிக்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாதவர், சொந்த தொகுதியிலேயே எம்.எல்.ஏ வேட்பாளராக நின்றும் ஜெயிக்க முடியாதவர் ஆனால், வெற்றி வாடையே முகராதவர் எப்படி அரசியலுக்கு வந்தார் என்றும், இவர் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல, மக்களுக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்றும், அமலாக்கத்துறை இத்தனை மணிக்கு அரெஸ்ட் செய்வார்கள் என்றும், பாஜக கட்சியில் அமலாக்கத்துறையினர் பணி செய்வது போல், ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றார். ஏற்கனவே பாஜக வில் இருந்த தலைவர்களை காட்டிலும் இவர் எல்லை மீறி வருகின்றார் என்றும் முன்னாள் தலைவரும், தற்போதைய கவர்னருமான தமிழிசை அவர்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தாமரை மலர்ந்த நிலையில், பாஜக அண்ணாமலையால் தாமரை செடியையே காலி செய்திடுவார் என்றும், விரைவில் பாஜக தலைவர் அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பிப்பதாகவும், அப்போது தான் அண்ணாமலையின் உண்மை ரூபம் என்ன என்று மோடிக்கும், அமித்ஷாவிற்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்