வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (15:03 IST)

இளைஞர் ஆட்டோவில் 2 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

bihar
பீகார் மாநிலம் சஹர்சாவில் பைக் மீது மோதிய ஆட்டோ, பைக் ஓட்டுனரை ஒன்றரை கிமீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது.
 

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில் உள்ள சஹர்சா என்ற பகுதியில்,  நேற்று பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் மீது ஆட்டோ மோதியது.

உடனே ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கில், பைக்கில் வந்தவரை 2 கிமீ தூரம் வரை சாலையில் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த   நிலையில், அருகில் இருந்தவர்கள் பைக்கில் வந்த கிஷோர் சிங்கை மீட்டு அருகிலுள்ள சதர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், பலத்த காயம் அடைந்துள்ள நபரின் பெயர் கிஷோர் சிங் (25) கால் பலத்த காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.