வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (16:46 IST)

ராகுல்காந்தியின் 'ஒற்றுமை யாத்திரை' இளைஞர்களை ஈர்த்துள்ளது- பரூக் அப்துல்லா

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை பற்றி காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,  வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, சமீபத்தில், ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி  உள்ளிட்ட  மாநிலங்களின் வழியே பயணித்து தற்போது  உத்தரபிரதேசத்தில் யாத்திரையை   ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரை  நேற்று, உத்தரபிரதேசத்திற்குள்  நுழைந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உ.,பி  மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரை வரவேற்று  பேசியிருந்தார்.

இந்த நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ராகுல்காந்தியின் ஒற்றுமைப்பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், காஷ்மீரில் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பின் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை; தற்போது, ராகுல்காந்தி மேற்கொண்டு வரும்   ஒற்றுமைப் பயணம் இளைஞர்களை ஈர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், கமலின் ம.நீ. மய்யம் கட்சியினர் ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.