குளிக்கும் போது பெண்ணை வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் !
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள கொள்ளூரில் வசித்து வந்தவர் ஆனந்தன். இவரது மனைவி உமா.
இந்தத் தம்பதியர்க்க்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உமா குளிக்கும்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்க்கொண்டு அவர்து ஆசைக்கு இனங்கும்படி கூறி மிரட்டியதாகத் தெரிகிறது.
பின்னர்,இதுகுறித்து உமா தனது கணவரிடம் கூறவே அவர் வெங்கடேஷிடம் கேட்டதற்கு ஆனந்த் வீட்டிலுள்ளோர் அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஆனந்த் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.