பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் ’’இதுக்காகத்தான் ’’பயன்படுத்துகிறார்- சீமான் குற்றச்சாட்டு

Sinoj| Last Modified திங்கள், 2 நவம்பர் 2020 (17:45 IST)


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் கமல்ஹாசன். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை அவர் தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்துவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.


தமிழ் சினிமாவின் சீனியராக கமல்ஹாசன் இருந்தாலும் அரசியலில் அவருக்கு முன் அரசியல் களம் கண்டவர் சீமான்.

இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குக பெற்றது.

இதுகுறித்த கேள்விக்கு இன்று செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.அப்போது அவர் கூறியதாவது :


விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் தொகுந்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துகிறார் எனத் தெரிவித்தார்.இதில் மேலும் படிக்கவும் :