வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (11:01 IST)

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாளை 10:35 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.  வருகிற 12-ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்,  13ஆம் தேதி திக்விஜயம் ஆகியவை நடைபெறுகிறது.  
 
14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. இதை தொடர்ந்து 15 ஆம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும் நிலையில் 16ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.