பிரபல நடிகரின் வீட்டில் திருடிய கொள்ளையன் கைது! போலீஸார் அதிரடி
தமிழ் திரையுலகின் பிரபல நடிக ஆர் கேயின் மனைவியை கட்டி போட்டு 200 பவுண் நகை மற்றும் 2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவத்தில் ஒருவரை போலீஸார் பிடித்த
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் ஆர்.கே. இவர் எல்லாம் அவன் செயல் புலிவேஷம் உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலாவின் அவன் இவன் என்ற படத்தில் வில்லனாக நடித்த இவர் விஜய்யின் ஜில்லா விஷாலின் பாயும்புலி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் நேற்று ஆர்கே மனைவி ராஜி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் புகுந்து ராஜியை கட்டி போட்டுவிட்டு 200 பவுண் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளையில் ஆர்கே வீட்டு காவலரும் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவலாளி உள்பட 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை வட மா நிலத்தில் தனிப்படை போலீஸார் பிடித்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேரை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Edited by Sinoj