வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (18:27 IST)

தாயை கொடூரமாக கொன்ற மகன்

வீட்டில் பெற்றோர் விடுதியில் சேர்ப்பதை விரும்பாத மாணவன் தன் அம்மாவைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் என்ற பகுதியில் வசித்து வருபவர் யுவராணி. இவர் மகன் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சரியாகப் படிக்கவில்லை என தெரிகிறது. எனவே, பெற்றோர் அவரை விடுதியில் சேர்க்க திட்டமிட்டனர்.

ஆனால், விடுதி சென்று படிக்க விருப்பமில்லாத மாணவன், தன் தாயிடம் விடுதி செல்லவில்லை என கூறியுள்ளார். ஆனால், விடுதியில் சேர்த்தால்தான் நன்றாகப்படிப்பார் எனக் கூறி, வீட்டில் இருந்தால் படிப்பில் சரியாகக் கவனம் போகவில்லை என கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, மாணவனுக்கும் அவன் தாயிற்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.,  அதன்பின்,  தன்னை விடுதிக்கு அனுப்பிடுவார்களோ என ஆத்திரத்தில் இருந்த மாணவன், இரவில் தன் தாய் தூங்கும்போது, ஹாலோ பிளாக் கல்லை தூக்கி அவர் தலையில்போட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு , மாணவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj