புதன், 21 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (11:52 IST)

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி: உயர்நீதிமன்றம்

court
சத்தியமங்கலம் வனப்பகுதிச் சாலையில் இரவிலும் இலகுரக வாகனங்கள் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கனரக வாகனங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்றும், அனைத்து நேரங்களிலும் பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி என்றும், பொதுபோக்குவரத்து, இருசக்கர வாகனங்களுக்கு காலை 6 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது தெரிவித்துள்ளது.
 
மேலும் அப்பகுதி மக்கள் உரிய அனுமதியுடன் சென்று வரலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.