வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (14:45 IST)

வெற்றிகரமாக இயங்கும் ஒரே இயக்கம் அதிமுக - ஓ. பன்னீர்செல்வம்

வெற்றிகரமாக இயங்கும் ஒரே இயக்கம் அதிமுகதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளனர்.
தினகரனின் அமமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணையும் விழா இன்று நெல்லை மாவட்டம்  தென்காசியில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி,மற்றும் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்தனர்.
 
இவ்விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது :
 
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு , வெற்றி கரமாக இயங்கிக்கொண்டிருக்கிற ஒரே இயக்கம் அதிமுகதான் என்று தெரிவித்தார். மேலும், ஒரு சாதாரண தொண்டன் முதல்வராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டும் தான் சாத்தியம் என்று தெரிவித்தார்.