1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heir politically risky DMK H taunted Raja

வாரிசு அரசியல் ஆபத்தானது : மு.க.ஸ்டாலினை சீண்டிய ஹெச். ராஜா

Heir political
சமீபத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தன் மகன் உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞர் அணி செயலர் பதவி வழங்கினார். இதற்கு முன்னதாக இந்த பதவியை வகித்த சாமிநாதனுக்கு வேறு ஒரு முக்கிய பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பாக பிரசாரம் மேற்கொண்டதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பதவி வழங்கபட்டது. இதை அக்கட்சி உறிபினர்கள் , தொண்டர்கள் என எல்லொரும் வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.
 
இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஹெச். ராஜா விமர்சனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :
’வாரிசு அரசியல் ஆபத்தானது. திமுக கட்சியின் இளைஞர் அணிச் செயலராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதன் மூலம், திமுகவின் அடுத்த தலைவருக்கான பட்டாபிஷேகம் முக ஸ்டாலின் நடத்தியுள்ளார். இந்த வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்பதால் பாரதிய ஜனதா கட்சியில் வாரிசு அரசியல் இல்லை’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
முகிலனை நாய் கடித்துள்ளது : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்