செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (14:19 IST)

ராஜீவ் காந்தி சிலையின் தலையை உடைத்த மர்ம கும்பல்! - விஜய் வசந்த் எம்பி காவல்துறையிடம் புகார்!

vijay vasanth MP
கன்னியாகுமரி மாவட்டம். அருமநல்லூர் சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை மர்ம நபர்களால்  உடைக்கப்பட்டுள்ளது தகவல் அறிந்து வந்த  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் வந்து பார்வையிட்டார்.


 
அதனை தொடர்ந்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் உடனடியாக அதே இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை மீண்டும் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி சிலை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது இந்நிலையில் இந்த சிலை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த சிலையை தலையை உடைத்து எரிந்து விட்டு சென்று இருக்கின்றனர் தகவல் அறிந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடைக்கப்பட்ட சிலையை பார்வையிட்டு காவல்துறை அதிகாரியிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து  அவர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார் மேலும் இதே போல் மீண்டும் அந்த சிலையை அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார் இதில் மாவட்ட தலைவர் உதயம், வட்டாரத் தலைவர் செல்வராஜ், சகாயராஜ், சுந்தரராஜ், முகமது ராபி,, மிக்கேல் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் உடன் இருந்தனர். ராஜீவ் காந்தி சிலை உடைக்கப்பட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் அதனால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.