1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (07:50 IST)

மது போதையில் பெற்ற மகனை கொலை செய்த தந்தை

தருமபுரி அருகே மதுபோதையில் பெற்ற மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் வினோத். இருவரும் அதே பகுதியில் கட்டட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தந்தை மகன் இருவரும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் இருந்த கயிற்றுக் கட்டிலில் யார் தூங்குவது என்ற தகராறில், பெற்ற மகன் என்றும் பாராமல், மணி வினோத்தின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வினோத், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீஸார் மணியின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.