தி. மு. க., தமிழுக்கு என்ன செய்தது ? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
குரூப் - சி எனப்படும் துறைசார்ந்த ரயில்வே பொதுப்போட்டித் தேர்வை தமிழில் நடத்த தேவையில்லை என ரயில்வேதுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில்வே தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதற்கு, அமைச்சர் ஜெயக்குமார், திமுக., தமிழுக்கு என்ன செய்தது..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, நேற்று , அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :
குரூப் -சி எனப்படும் ரயில்வே ஊழியர்களுக்கான துறைசார்ந்த தேர்வில் தமிழ் புறக்கணிப்படுவது கண்டிக்கத்தக்கது.
வேதாளம் முறுங்கை மரம் ஏறுவது போல ரயில்வே துறை தேர்வில் தமிழ் மொழியை புறக்கணிக்கணிப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. திமுக சார்பில் அதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் ,தமிழகத்தில் ,ஒரு மொழிப்போருக்கு எங்களை ஆயத்தமாக்க வேண்டாம்.மேலும் குரூப் - சி தேர்வில் இந்தியில் எழுதினால் சலுகை மதிப்பெண் வழங்குவது போன்று தமிழில் எழுதுவோர்க்கு, சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
தமிழாழ் தமிழை வைத்து வியாரம் செய்த திமுக., மத்தியில் ஆட்சியில் இருந்த போது, ரயில்வே தேர்வுகளை தமிழில் நடத்த என்ன நடவடிக்கை மேற்கொண்டது..? மேலும் திமுக., தமிழுக்கு திமுக., என்ன செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.