செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (15:59 IST)

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- விஜயகாந்த்

தமிழகத்தில் ஆவின் நிறுவனம கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டுமென்று பால் உற்பட்தியார்கள் பால் நிறுத்தப் போராட்டில் ஈடுபட்டுள்ள நிலையில், ''பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்'' என்று  நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’ஆவின் நிர்வாக சீர்கேடு, பால் கொள்முதலை குறைத்தது போன்ற பல்வேறு காரணங்களால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆவின் பால் விநியோகத்தில் இருக்கும் தட்டுப்பாடுகளை உடனடியாக கலைந்து, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி பால் சீராக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்காமல் மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்து அறிக்கை தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகவர்களுக்கு பால் சப்ளையைக் குறைத்தது.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதலை குறைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பால் சப்ளை அடியோடு முடங்கியுள்ளது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் பாலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.