செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (15:16 IST)

மின் கட்டண உயர்வுக்கு அதிமுக ஆட்சிதான் காரணம்.! மத்திய அரசுக்கு அதிகாரம் கொடுத்தது இபிஎஸ்.!!

Selvaperundagai
முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சிக் காலத்தில்  கையெழுத்திடப்பட்டதால் மின்சாரம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கைக்குப் போய்விட்டது என்றும் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசே காரணம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
 
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில்  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
Congress
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்று தெரிவித்தார்.  மக்கள் மீது சுமையை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அவர் கையெழுத்திடவில்லை என்றும் கூறினார்.

 
அதன் பின்னர் முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அந்தத் திட்டத்தில் கையெழுத்திடப்பட்டதால் மின்சாரம் தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கைக்குப் போய்விட்டது என்று அவர் தெரிவித்தார்.  அதனால் தான் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார்.