1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (18:09 IST)

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடவும் தயார்: செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு..!

Selvaperundagai
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் போராட தயார் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பாக எத்தனை ஆண்டுதான் இன்னொரு கட்சியிடம் தொகுதிகளை பெற்று வருவது? தொகுதிகளை கொடுக்கும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்று திமுகவுக்கு எதிராகவே அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜக உட்பட பல கட்சிகளை தீவிரமாக எதிர்த்து வரும் செல்வப்பெருந்தகை காவிரி பிரச்சனையில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடுவும் தயார் என்று தெரிவித்துள்ளார்

நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் கர்நாடகாவை சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கி பாஜக சித்து விளையாட்டு காட்டுகிறது என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் போராட்ட தயார் என செல்வப்பெருந்தகை கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran