Daily Horoscope
✕

இப்பதான் ஆர்.பி.ஐ ரூல்ஸ் தெரியுதா?!.. என்னா ஏமாத்துறீங்களா?!.. தங்கம் தென்னரசு ஆவேசம்..

Updated: திங்கள், 1 ஜூன் 2026 (12:28 IST)
விவசாயக்கடன் தொடர்பாக தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு கீழே வைத்திருக்கும் விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி எனவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் கடனில் 50 சதவீத தள்ளுபடி எனவும் அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பெண் 5 ஏக்கருக்கு கீழே இருப்பவர்களுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி அதற்கு மேலே இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் தள்ளுபடி என அறிவித்தது. இது விவசாயிகளிடம் கடும் அதிருத்தியை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ‘ இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின் படிதான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தவெக அமைச்சர் கூறியிருந்தார்.

தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் போது வராத ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும் போது மட்டும் எங்கே இருந்து திடுமென குதித்து வருகின்றன? இது நிர்வாக திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?’ என கேள்வி எழுப்பி இருக்கிறார்<>

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments