செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:45 IST)

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு.. உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு!

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
 
தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://trb.tn.gov.in  என்ற இணையதளம் சென்று அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள், 03.10.2023 முதல் 10.10.2023 (பிற்பகல், 05.30 மணி) வரை ஆசிரியர் தேர்வுவாரிய இணையதள முகவரியில் ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran