வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:39 IST)

தீபாவளி கொண்டாட்டம்… டாஸ்மாக் விற்பனை 413 கோடி!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனை 413 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது.

டாஸ்மாக்கின் மூலமாக அரசு மிகப்பெரிய அளவில் வருவாய்  ஈட்டிவருகிறது. பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் 100 கோடி ரூபாய் அளவுக்கு தினசரி வியாபாரம் நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு 2 நாட்களில் சுமார் 413 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான 3 ஆம் தேதி 227.88 கோடி ரூபாயும், தீபாவளி அன்று 207.6 கோடி ரூபாயும் விற்பனை நடந்துள்ளது.