Daily Horoscope
✕

டான்செட் (TANCET) தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! – எப்படி பார்ப்பது?

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 9 ஜூன் 2022 (10:36 IST)
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைகழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்.ஆர்க், எம்.டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர டான்செட் (TANCET – Tamilnadu Common Entrance Test) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வு கடந்த மே மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் முக்கியமான 14 நகரங்களில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/ என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஜூன் 30ம் தேதி வரை இந்த இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

விஐடி பல்கலை.யில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மது பிரியர்களுக்கு ஷாக்!.. பெங்களூரில் மதுவுக்கு தடை!...

பழிவாங்கும் நடவடிக்கை!.. நாம் தமிழர் கட்சி கார்த்திகா கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!..

எஸ்.ஐ.ஆர் போராட்டத்திற்கு நடுவில் ஓய்வெடுக்க வியட்நாம் சென்ற ராகுல் காந்தி: பாஜக கிண்டல்

திருச்செந்தூர் கோவில் உண்டியலில் திருடிய அர்ச்சகர் கைது.. உடந்தையாக இருந்த ஒருவரும் கைது...

அடுத்த கட்டுரையில்
Show comments