வரவு எட்டணா.. செலவு பத்தணா!? – அதிகரிக்கும் தமிழக வருவாய் பற்றாகுறை!?
தமிழக அரசின் 2021-22 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசிப் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அரசின் ஆண்டு வருவாயை விட செலவினங்கள் அதிகரித்திருப்பதால பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பேசிய திமுக பொது செயலாளர் தற்போது அரசின் கடன் 4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அடுத்த ஆண்டில் 5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2020-21ல் அரசின் ஆண்டு வருவாய் 1.80 லட்சம் கோடியாக உள்ள நிலையில் செலவினங்கள் 2.46 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் 65,994 கோடி அளவில் வருவாய் ப்ற்றாகுறை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய பல நலத்திட்ட நிதி உதவிகள், வரி சலுகைகள் கிடைக்க பெறவில்லை என ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.