தமிழகத்தில் அக்டோபரில் அதிகரிக்கும் கொரோனா! – எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் தகவல்!
தமிழகம் முழுவதும் அக்டோபரில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டும் என எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் எதிர்வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் அக்டோபரில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1.38 லட்சமாக உயரும் வாய்ப்புள்ளதாகவும் எம்.ஜி.ஆர் பல்கலைகழக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக 700 க்கும் மேல் பதிவாகி வந்த ஒருநாள் கொரோனா பாதிப்புகள் தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது, இந்நிலையில் எம்.ஜி,ஆர் பல்கலைகழக ஆய்வுகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.