புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூன் 2020 (12:35 IST)

இனவெறியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

கடந்த மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு என்பவர் அமெரிக்காவின் போலீஸ் அதிகாரி ஒருவரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக வெளிவந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ அமெரிக்கா முழுவதும் வைரலானதை அடுத்து அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மூன்றாம் கிரேடு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்டு பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு ஏற்கனவே சில உடல் உபாதைகள் இருந்ததாகவும் அவருக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததாகவும் மேலும் அவர் கழுத்தை நெறித்தத்தால் சாகவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது 
 
இதனை மறுத்த ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் மீண்டும் தங்களுடைய மருத்துவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின்படி மீண்டும் பிரேத பரிசோதனை நடந்தது. அதில் ஜார்ஜின் மரணம் கழுத்தை நெரிக்கபட்டதால் தான் நேர்ந்தது என்றும் கழுத்து நெறிக்கபப்ட்டதால்  மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டு அவர் இறந்ததாகவும், எனவே இது இனப்படுகொலை தான் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதன் முடிவு தற்போது வெளிவந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த போலீஸ்காரர் உட்பட போலிஸ் அதிகாரிகள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது