தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின்தங்கிய தமிழகம்! – இந்திய அளவிலான பட்டியல்!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் மே 23 வரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பற்றி வெளியாகியுள்ள தரவுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட பின் தங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 16.1 சதவீதமும், 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 36 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 41.5 சதவீதமும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 9 சதவீதமும், 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 18 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18 சதவீதமும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தை ஒப்பிடும்போது காஷ்மீர், லடாக், ராஜஸ்தான், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிக சதவீத மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.