திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (11:48 IST)

ஹரி நாடார் நகைகளை எல்லாம் இந்த நடிகையிடம்தான் கொடுத்து வைத்துள்ளாரா?

நடிகை விஜயலட்சுமியிடம்தான் தனது நகைகளை எல்லாம் கொடுத்து வைத்திருக்கிறார் என சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார். இவர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சுயேட்சைகளில் அதிகவாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ரூ. 16 கோடி மோசடி வழக்கிலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவ் வும் கேளரா மாநிலம் கோவளத்தில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் அவரை விசாரணைக்காக பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது சினிமா கிசுகிசு நிகழ்ச்சியில் ஹரி நாடார் தனது நகைகளை எல்லாம் நடிகை விஜயலட்சுமியிடம்தான் கொடுத்து வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால் இந்த தகவலை விஜயலட்சுமி முழுமையாக மறுத்துள்ளார்.