பள்ளிகளில் மதமாற்றம் நடைபெறவில்லை! – தமிழக அரசு விளக்கம்!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 5 மே 2022 (12:22 IST)
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக தஞ்சாவூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே காரணம் என சிலர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து சமீபத்தில் கன்னியாக்குமரி அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான புகாரில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த தமிழக அரசு, அரசு பள்ளிகளில் கன்னியாக்குமரி, திருப்பூர் இரண்டு பகுதிகளில் மட்டுமே மதமாற்ற புகார்கள் எழுந்ததாகவும், அந்த புகார்களின் மேல் அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் இந்த இரண்டு இடங்கள் தவிர வேறு எங்கிருந்தும் புகார்கள் வரவில்லை என்றும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது.

எல்லாம் காட்டு

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

சினிமா பாத்து சீன் போடுறது இல்ல ஆட்சி!.. தவெகவை விளாசிய பிரேமலதா!..

நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்: பிரதமர் மோடி

இன்னொரு அதிமுக விக்கெட் விழுந்தது.. சிங்கை ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments