புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (08:43 IST)

கொசுவிடமிருந்து காக்க கொசுவலை! - முதல்வரின் புதிய திட்டம்!

தமிழகத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுக்க மக்களுக்கு கொசு வலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் நீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக பரவி வருகிறது. கொசுக்களினால் பல்வேறு நோய்கள் மக்களை தாக்கி வருகின்றன. கொசு பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் சூழலில் ஏழை, எளிய மக்களை கொசுக்களினால் பரவும் நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு கொசுவலைகள் வழங்க இருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலில் கொசுவலை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கபடும் எனவும், பிறகு அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வருக்கு கமெண்ட் செய்துள்ள பலர் கொசுவலை அளிப்பதை விடவும், கொசுக்களை ஒழிப்பதே முக்கியமானது என கோரிக்கை வைத்துள்ளனர்.