செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (12:17 IST)

நானும், ஸ்டாலினும் ஒன்னாதான் எம்.எல்.ஏ ஆனோம்! – மனம் திறந்த எடப்பாடியார்!

அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என பலரும் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வார இதழ் ஒன்றில் அவர் பேட்டியளித்தபோது ஆட்சியை கலைக்க பலர் முயற்சித்ததாகவும், தன்னால் ஆட்சியை வழிநடத்த முடியாது என தப்பு கணக்கு போட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தானும், ஸ்டாலினும் 1989ல் ஒன்றாகவே எம்.எல்.ஏவாக ஆனதாகவும், ஆனால் அவர் குடும்ப அரசியல் பின்புலத்திலிருந்து பல்வேறு பதவிகளை பெற்றதாகவும், தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று முதலமைச்சர் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.