திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2019 (14:34 IST)

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க அதிமுக முயற்சி செய்கிறது - மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான அனைத்தையும் அதிமுக செய்து வருவதாக திமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீண்ட காலமாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே உள்ளது. இந்தத் தேர்தல் நடைபெறாததால், கிராமங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதையும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டநிலையில், இன்னும் காலதாமதம் ஆகும் என தெரிகிறது.
 
இதுகுறித்து திமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
 
உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை இன்னும் செய்யவில்லை. புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை செய்யவில்லை.  பேரூராட்சியில் பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு வார்டு மறுவரையறை செய்யவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.
 
மேலும், முறையாக அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டுத்தான் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்ப்பார்க்க்கிறோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கத் தேவையான முயற்சிகளை அதிமுக  செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.