செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (13:41 IST)

லீவ் நாட்களில் மெட்ரோவில் போனால் 50% ஆஃபர்! மக்கள் மகிழ்ச்சி!

சென்னை மெட்ரோவில் பயணிக்க விடுமுறை நாட்களில் பாதி கட்டணம் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது பலர் இந்த சேவையை பயன்படுத்தி வந்தாலும் விடுமுறை நாட்களில் மெட்ரோவை மக்கள் அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் காலை 8 மணிக்கு மெட்ரோ சேவை தொடங்குவதை மாற்றி 6 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் கருத்தை பரிசீலித்த மெட்ரோ நிர்வாகம் ஞாயிற்றுக் கிழமை மற்றும் மற்ற அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கே தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் மட்டும் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.