வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick

இன்று உலக பிரியாணி தினம்! – கடைகளில் குவிந்த கூட்டம்!

இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு உணவகங்களில் சலுகைகள் வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்களுக்கும், பிரியாணிக்கும் நீண்ட நெடுகாலமாக ஒரு உறவு இருந்து வருகிறது. இந்நிலையில் உலக பிரியாணி தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு உணவகங்கள் சலுகைகள் வழங்கியுள்ளன. சென்னை, திருச்சி பகுதிகளில் உள்ள தனியார் உணவகங்கள் பழைய 10 பைசாவை கொடுத்தால் பிரியாணி தரும் சலுகையை அறிவித்தன. இதனால் பலர் பழைய 10 பைசாக்களோடு நீண்ட தூரம் வரிசையில் நின்று பிரியாணி பெற்று சென்றனர்.

அதேபோல கொரோனா முன்கள பணியாளர்கள், துப்புறவு தொழிலாளர்களுக்கு ரூ.1 க்கு பிரியாணியும் வழங்கப்பட்டது.