நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்.. என்னென்ன எதிர்பார்ப்புகள்?
தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.
இதில் குடிமராமத்து பணிகளுக்காகவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும், சென்னையில் குடிநீர் வழங்க உருவாக்கப்பட்டு வரும் புதிய நீர்பிடிப்பு ஏரிக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்தான புதிய அறிவிப்புகள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வரலாம் எனவும் எதிர்ப்பார்ப்புகள் உள்ளதாக தெரியவருகிறது.