புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (19:35 IST)

சுட்ட தோசையே சுடாதீங்க... தமிழிசை கலாய்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. பின்னர் பாஜகவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.
 
இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
 
அதன்படி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், தேவகவுடா போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்து வந்தார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு, 
 
சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை சந்தித்துவிட்டார், அதற்கு முன்னால் தேவகவுடாவை சந்தித்துவிட்டார், ராகுலை சந்தித்துவிட்டார். மிகப்பெரிய கூட்டணியை அமைத்துவிட்டார் என்கின்றனர். எந்த புது தோசையையும் சுடவில்லை. ஏற்கெனவே எதிரணியாக இருக்கும் ஒரு தோசையை பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறார். அவ்வளவுதான் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.