வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 4 நவம்பர் 2018 (13:05 IST)

தமிழிசையின் புதிய பஞ்ச்!!! மரகதலிங்கத்தை காப்பாற்ற மாணிக்கத்தால்தான் முடியும்

மரகதலிங்கத்தை காப்பாற்ற மாணிக்கத்தால்தான் முடியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 
 
ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் சிறப்புப் பிரிவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதிரடியாக அவர்கள் நடத்தும் ரெய்டில் பதுக்கப்பட்ட பல்வேறு சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இன்றும் கூட பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் சிறப்புப் பிரிவினர் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
இதற்கிடையே இன்று அதிகாலை ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோச மங்கை ஆலயத்தில் மரகதலிங்க நடராஜர் சிலையை திருட முயற்சி நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உத்திரகோச மங்கை ஆலயத்தில் மரகதலிங்க நடராஜர் சிலையைத்திருட முயற்சி...என்ற செய்தி கவலை அளிக்கிறது. மரகதலிங்கத்தைக்காப்பாற்ற மாணிக்கத்தால்தான் முடியும்.காவல்துறை உயர்அதிகாரி பொன்மாணிக்கவேல் பதவி நீடிப்பை கனிவுடன் அரசு பரிசீலிக்கவேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.