'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' தமிழிசை..! - அமெரிக்கா கெளரவிப்பு

Last Updated: திங்கள், 29 அக்டோபர் 2018 (18:35 IST)
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதை அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் வழங்கி கெளரவித்துள்ளது. 
 
கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த விருதை பெற்றுள்ள தமிழிசை,  இதனை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவின் சிகாகோ நகரில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் அமெரிக்க செனட்டர் உயர்திரு.டேனி.கே.டேவிஸ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. அதில் அமெரிக்க பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் செனட்டர்  உயர்திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
 
அப்போது  “இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்” என்ற சர்வதேச விருது தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட தமிழிசை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இதனை நன்றியுடன் அர்பணிக்கின்றேன் என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :