ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (16:31 IST)

தமிழருவி மணியன் செத்துட்டான் - இனி ஒருபோதும் அரசியலில் ஈடுபடபோவதில்லை!

இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் - தமிழருவி மணியன் 
 
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் தனது உடல் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படி ஏற்று உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.  
 
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல் நலனை கணக்கில் கொண்டு ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர். இப்படியான சூழலில் ரஜினியை நம்பி வந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகிவிட்டார். 
 
ஆம், இன்று இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் "இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை. இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் தமிழருவி மணியன் செத்துட்டான். " என அதிரடியாக அறிவித்து அரசியலில் இருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார்.
 
தமிழருவி மணியனை ரஜினிகாந்த்,  கட்சியின் மேற்பார்வையாளராகவும், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.  ரஜினி கட்சி தொடங்கிய பின், காந்திய மக்கள் இயக்கம் அதனுடன் இணைத்துக் கொள்ளப்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்திருந்தார்.ஆனால், தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.