புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 மே 2019 (13:18 IST)

தமிழகத்தில் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை – தமிழக அரசு அதிரடி பதில் !

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படாதது குறித்து நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது குறித்து சென்னை நீதிமன்றத்தில் ஜெயா சுகின் என்பவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்துப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதில் பதில் மனுவைத் தாக்கல் செய்த கூடுதல் தலைமைச் செயலாளர் ‘தமிழகத்தில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததற்கு நிலுவையில் உள்ள வழக்குகளேக் காரணம். மேலும் வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனப் பணிகள் முடியாமல் இருப்பதும் தேர்தல் நடத்துவதில் பிரச்சனையாக உள்ளன. . எனவே தற்போது தேர்தல் நடத்தும் சூழல் தமிழகத்தில் இல்லை. வாக்காளர் பட்டியலை சரிப்பார்த்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘ உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களை நியமித்து குடிநீர், மின் விநியோகம் போன்ற அத்யாவசியத் தேவைகள் எதுவும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டு வருகிறோம். அதனால் மனுதாரர் சொல்வது போல உள்ளாட்சி தேர்தல்களின் தாமதத்தால் எந்த பணிகளும் முடங்கவில்லை’ என சொல்லியுள்ளனர்.