வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (11:18 IST)

ரம்ஜானை முன்னிட்டு தேர்தல் தேதியில் மாற்றமா ? – உச்சநீதிமன்றத்தில் வழக்கு !

ரமலான் மாதம் தொடங்கியிருப்பதால் மீதியுள்ள 3 கட்ட தேர்தல்களை முன்கூட்டியே நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு  கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தல் மே 21 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றன. இந்நிலையில் ரமலான் மாதம் மே 5 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தேர்தல் நடந்தால் நோன்புகள் பாதிக்கப்படும் என்பதால் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவுகளை முன்கூட்டியே நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதை ஏற்று விசாரித்த உச்சநீதிமன்றம் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவேளை தேர்தல் தேதி மாற்றப்பட்டாலும் முடிவுகள் அறிவிக்கும் தேதியில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.