1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (17:43 IST)

கொரோனா பாதித்தவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை: விஜய பாஸ்கர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,487 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1,111 பேர் பாதிப்படைந்துள்ளதாவும், 81 பேர் குணமடைந்துள்ளதாகவும், 12 பேர் மரணித்துள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், கொரோனாவால் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த கேரள அரசின் பிளாஸ்மா சிகிச்சை முறைகளை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 
 
கேரள மாநில அரசு இந்த சிகிச்சை முறையை கையாண்டு 99 சதவீதம் உயிரிழப்புகளை தடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தமிழக அரசு பிளாஸ்மா சிகிச்சை முறையில் தீவிர கவனம் செலுத்த துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.