புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (17:14 IST)

1000 யூனிட் மின் கட்டணத்தை ரத்து செய்க: அன்புமணி ஸ்பெஷல் கோரிக்கை!!

1000 யூனிட்டிற்கான மின் கட்டணத்தை ரத்து செய்யுமாறு, பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமான அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் விரிவாக தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் 1,200-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருக்கிறது. மறுபுறம் ஊரடங்கு பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது. 
 
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் மக்கள் அடைந்து கிடப்பதால், மின்சாரப் பயன்பாடு கணிசமாக அதிகரித்து இருக்கும்.
 
ஏழை மற்றும் நடுத்தர மக்களால் மின்கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும்? என அரசு சிந்திக்க வேண்டும். எனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு மாதத்திற்கு 500 யூனிட் வீதம் 2 மாதத்திற்கு 1000 யூனிட்டிற்கான மின்கட்டணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.