செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (12:50 IST)

இதெல்லாம் நியாயமா சார்.. நீங்கதான் நடவடிக்கை எடுக்கணும்! – கேரள முதல்வருக்கு சீமான் கோரிக்கை!

கேரளாவில் வாடகை கொடுக்காத தமிழ் குடும்பங்களை உரிமையாளர்கள் வெளியே விரட்டியது தொடர்பாக கேரளா முதல்வரிடம் சீமான் புகார் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அன்றாட வேலைக்கு செல்லும் மக்கள் பலர் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வாடகை தரவில்லை என 48 தமிழ் குடும்பங்களை அந்த வீடுகளின் உரிமையாளர்கள் வெளியே துரத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சமயத்தில் மக்கள் இரக்கமின்றி நடந்து கொள்வதாய் பலர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”கேரளாவில் பொருளாதார நெருக்கடி சூழலால் வாடகை அளிக்க இயலாத தமிழ் குடும்பங்களை உரிமையாளர்கள் வெளியேற்றியுள்ள சம்பவம் வருத்தத்தை தருகிறது. இதுகுறித்து தாங்கள் கவனித்து உதவிகள் ஏதாவது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.