நாளை மறுநாள் முதல் செப்.15 வரை மழை….!!
இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது திடீரென வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சென்னை உள்பட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நாளை மறுநாள் முதல் செப்.15 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.